ஆட்டிசம்
நோய் அல்ல – அன்பால் சரிசெய்யக்கூடிய சிறு குறைபாடு மட்டுமே!!
ஆட்டிசம் என்பது அன்பாலும் நம்பிக்கையான ஆக்கப்பூர்வமான
நடவடிக்கைகளால் சரி செய்யக்கூடிய சிறு குறைபாடு மட்டுமே என்பதை பெற்றோர்களும் இச்சமூகமும்
உணர வேண்டும்.ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அழகான உயிரோவியங்கள்.அந்த ஓவியங்களின்
உணர்வுகளை நாம் புரிந்துக் கொண்டால் அக்குழந்தைகளும் இயல்பான வாழ்வை தொடர்வதோடு சாதனையாளர்களாகவும்
உருவெடுப்பார்கள் என்பது சாத்தியமானது.
ஆட்டிசத்தை ஒரு
நோயாக கருதுவது விழிப்புணர்வு அற்ற போக்கு.நிஜத்தில் அஃது நோய் அல்ல.அது சரி செய்யக்கூடிய
குறைபாடுதான்.இது சரி செய்யமுடியும் என்னும் நம்பிக்கை பெற்றோர்களிடையே உயிர் பெற்றால்
அவர்கள் சார்ந்த குழந்தைகளின் எதிர்காலம் நம்பிக்கையானதாக மெய்மம் கொள்கிறது.
ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர் தனது சுயசரிதையில்
“எங்களுக்கு நிறைய அறிவு இருக்கு.எங்களை சுற்றி என்ன நடக்கிறது என்பதை சரியாக புரிந்துக்
கொள்ள முடிகிறது.ஆனால்,அதை உங்களுக்கு புரிய
வைப்பதற்கான மொழிதான் எங்களுக்கு தெரியவில்லை”
என்கிறார்.இதுதான் நிதர்சனமும் கூட.நாம் அவர்களின் மொழியை புரிந்துக் கொண்டால் ஆட்டிசம்
என்பது வெறும் வார்த்தைதான்.அது யாருக்கும் பாதிப்பாக அமையாது.
ஆட்டிசக் குழந்தைகளை
உலகம் சம்தப்பட்ட நடப்புமுறை விஷயங்களுக்குள் கொண்டு வருவதும் அவர்களை பேச வைப்பதும் தான் கடினமான ஒன்றாக இருக்குமே தவிர அவர்களின் அறிவு திறன் என்பது
அளாதியானதாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.அவர்களும் பசி,தூக்கம்,வலி உட்பட
அனைத்து உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் உட்பட்டாவர்கள் தான்.ஆனால்,அதை வெளிப்படுத்த
அவர்களுக்கு வார்த்தைகள் மட்டுமே தெரியாது.
மேலும்,ஆட்டிசம் குழந்தைகள் காது,மூக்கு,வாய்,தொண்டை என உடல் ரீதியாகவும் ஆரோக்கியமாகவே உள்ளனர்.அவர்களிடையே
“பேச வேண்டும்” என்னும் எண்ணத்தை அவர்களுக்குள் கொண்டு வந்துவிட்டால் குழந்தைகளை ஆட்டிசத்திலிருந்து
எளிதாகா மீட்டும் விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
“ஏன் என் குழந்தை மட்டும் கூப்பிட்டால் என்னை திரும்பிப்
பார்க்கல,என் கண்ணை பார்த்துப் பேசல,மற்ற குழந்தைகளோடு சேர்ந்து சகஜமாக விளையாடல,காரணமே இல்லாமல் அடிக்குதும்கிள்ளுது,ஏன்
இத்தனை முரட்டுதனமாக நடக்குத?” போன்ற கேள்விகள்
ஒரு பெற்றோர் மத்தியில் எழுமானால் அக்குழந்தை ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம்
என மருத்துவம் கூறுகிறது.
ஒவ்வொரு வருசமும் ஏப்ரல் மாததை ஆட்டிசத்தின்
மாதமாக கொண்டாடுகிறார்கள். ஏப்ரல் 2ம் தேதியை உலக ஆட்டிச விழிப்புணர்வு தினமாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
ஆட்டிச குறைபாடுடைய குழந்தைகளும் அதன் பெற்றோர்களும் சந்தித்து, உரையாடுவதும் அக்குழந்தைகளுக்கான
சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்துவதும் மேலைநாடுகளில் வழக்கமான ஒன்றாக இருக்கும் சூழலில்
மலேசியாவில் அஃது இன்னும் பெரியதொரு விழிப்புணர்வோடு அணுசரிக்கப்படுவதில்லை என்றுதான்
கூற வேண்டும்.
1943ல் டாக்டர். லியோ கானர் (Dr. Leo Kanner) என்பவர்
உலகிற்கு ஆட்டிசம் என்ற வார்த்தையையே அறிமுகப்படுத்தினார். அவர் தனது “அன்பு
வளையத்தை சிதைக்கும் ஆட்டிசம்” (Autistic Disturbances of Affective Contact) என்ற
ஆய்வறிக்கையை நெர்வஸ் சைல்ட்(Nervous Child) என்ற பத்திரிக்கையில் வெளியிட்டார். அதில்தான்
உலகில் முதன் முதலாக ஆட்டிச பாதிப்புடைய குழந்தைகளின் பிரச்சனைகள் பேசப்பட்டது.
ஆனால், ஆட்டிசத்திற்கு காரணமாக கானர் கருதியதில் முக்கியமானது,
பெற்றோர்களின் அரவணைப்பை குழந்தைப் பருவத்தில் பெறாததினால் தான் இதன் பாதிப்பு
ஏற்படுகிறது என்று பெரிதும் நம்பினார். முற்றிலும் தவறான கொள்கை என்று பின்னாளில்
தெளிவாக நிறுவப்பட்டு விட்டது என்றாலும் ஆட்டிசம் எனும் குறைபாட்டை முதன் முதலாக வரையரை
செய்தவர் என்கிற வகையில் டாக்டர். கானரின் பங்கு மகத்தானது.
ஆட்டிசம் என்பதை மிகத் துல்லியமாக வரையறுக்க
முடியாததைப் போலவே அதற்கான சிகிச்சை முறைகளையும் அறுதியிட்டு கூற முடிவதில்லை. ஒருவருக்குப்
பயனளிக்கும் சிகிச்சை மற்றொரு குழந்தைக்கும் பயன் தரும் என்பது நிச்சயமில்லை. எனவே
இதற்கான சிகிச்சையைத் தேர்வு செய்யும் பொறுப்பு ஆட்டிசக் குழந்தைகளின் பெற்றோரிடமே
இப்போதைக்கு உள்ளது. இது ஒரு பெரிய ஆயாசத்தையும், குற்றவுணர்வையும் அவர்களுக்கு உருவாக்குகிறது.
தம் குழந்தை ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானால்
என்னமோ,ஏதோவென்று பெற்றோர்கள் பதறக்கூடாது.இதை பெரும் மனநோயாக கருத்திடக்கூடாது.இது
மன வளர்ச்சி தொடர்பிலான சிறூ குறைபாடுதான் என்பதை உணர்ந்துக் கொள்வதோடு ஆரம்பத்திலேயே
சரியான பயிற்சியையும் வழிமுறைகளையும் கையாண்டால் அதனை சரி செய்ய முடியும் என்னும் நம்பிக்கையையும்
கொண்டிருக்க வேண்டும்.
மலேசியாவில் ஆட்டிசம் குழந்தைகளை பராமரிக்க அரசாங்க மையங்கள் இருந்தாலும்,அங்கு பயிற்சியளிக்க போதிய பயிற்சியாளர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.மலேசியாவில்
ஆட்டிசம் குழந்தைகளை பராமரிக்க அமைக்கப்பட்டிருக்கும் மையங்களில் திறன் மிக்க பயிற்சியாளர்களை
அரசாங்கம் நியமிக்க வேண்டும்.,அதற்கான பயிற்சிகளை தன்னார்வாலர்களும் அம்மையங்களின்
பராமரிப்பாளர்களும் பெற்றிருப்பதையும் அரசு உறுதி செய்ய வேண்டும்.
கடந்த 2014ஆம் ஆண்டில் புள்ளியல் விபர அடிப்படையில் மலேசியாவில்
சுமார் 47,000 பேர் ஆட்டிசம் குறைபாடுடன் இருப்பதாகவும் நாட்டில் பிறக்கும் 600 குழந்தைகளில்
ஒரு குழந்தை ஆட்டிசத்தோடு பிறப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.வளர்ந்த நாடுகலில் 68 குழந்தைகளில்
ஒரு குழந்தை ஆட்டிசம் குறைபாடுடன் பிறப்பதாகவும் புள்ளிவிபரங்கள் காட்டுகிறது.மேலை
நாடுகலோடு ஒப்பிடுகையில் மலேசியாவில் இன்னமும் ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வு ஆக்கப்பூர்வமாகவும்
விரிவாகவும் மேற்கொள்ளப்படவில்லை என்பதுதான் உண்மை.
ஆட்டிசத்துக்குக் குறிப்பிட்ட சிகிச்சை எதுவுமில்லை. அன்பும் அரவணைப்புமே இதற்கான மருந்துகள். இந்தக் குழந்தைகளுடன் அன்போடு நெருங்கிப் பழகும்போதுதான் அவர்கள் நம்மை நெருங்கி வருவார்கள். எனவே, இவர்களோடு நாம் அதிக நேரம் செலவழிக்க வேண்டும்; பூங்கா, கடற்கரை, பொருட்காட்சி போன்ற வெளி இடங்களுக்கு அடிக்கடி அழைத்துச் செல்ல வேண்டும்.
முதலில் பல் தேய்த்தல், குளித்தல், சாப்பிடுதல், தூக்கம் போன்ற தினசரிப் பழக்கவழக்கங்களை ஒழுங்குபடுத்தப் பயிற்சிகள் தர வேண்டும். குழந்தைக்குப் புரியும் விதமாக நிறையப் பேச வேண்டும், நீச்சல், சைக்கிள் ஓட்டுதல்,ஓவியம் வரைதல், யோகா போன்ற பயிற்சிகள் தரப்பட வேண்டும். இந்தப் பயிற்சிகள் அவர்களின் உடல் திறனை அதிகப்படுத்து வதுடன், தத்தம் வேலை களைத் தாமே சுயமாகச் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை யையும் தரும்.
இந்தக் குறைபாட்டின் ஆரம்ப கட்டத்திலேயே மொழிப் பயிற்சிக்கும் பேச்சுப் பயிற்சிக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். உளவியல் சார்ந்த பயிற்சிகள், கல்விக்கான பயிற்சிகள், அறிவுத் திறன் பயிற்சிகள் போன்றவற்றையும் முறைப்படி தர வேண்டும். பேச வேண்டும், பழக வேண்டும் என்பது போன்ற எண்ணங் களைக் குழந்தையிடம் ஏற்படுத்துவதற்குத் பெற்றோர்களின் பங்கு மட்டுமல்லாமல் குடும்பத்தில் உள்ள அனைவரின் ஒத்துழைப்பும் அவசியமாகிறது.
ஆட்டிசம் இந்த மதம் சார்ந்து,இனம்
சார்ந்து,மொழி சார்ந்துதான் வரும் என்பதில்லை.அஃது பணக்காரனுக்கும் வரலாம்,ஏழைக்கும்
வரலாம்.கற்றவனுக்கும் வரலாம்,கல்லாதவனுக்கும் வரலாம்.”Down’s Syndrome எனப்படும் மூளை
வளர்ச்சி சம்மதப்பட்ட குறைப்பாட்டை காட்டிலும் ஆட்டிசம் இன்றைக்கு பெரும் பரவலாக உருவெடுத்து
வருகிறது.இது பெண்களை காட்டிலும் ஆண்களுக்கு தான் அதிகம் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
அக்குழந்தைகளிடம் அன்போடு நம்பிக்கையையும்
விதைக்க வேண்டும்.அப்போதுதான் உயிரோவியமாய் விளங்கும் அக்குழந்தைகள் தங்களுக்கான வாழ்வியல்
ஓவியத்தை நம்பிக்கையோடு வரைய முடியும்.உலகிற்கு மின்சாரம் வழி வெளிச்சத்தை ஏற்படுத்தியதோடு
மட்டுமின்றி பல்வேறு கண்டுபிடிப்புகளை உலகிற் அளித்த தோமாஸ் அல்வா எடிசன் கூட ஆட்டிசத்தால்
பாதிக்கப்பட்டவர் தான்.அவரை போல் பல அறிவுஜீவிகள் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டு பின்னர்
பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளனர் என்பதை பெற்றோர்கள் புரிந்துக் கொண்டு நம்பிக்கையோடு
அக்குழந்தைகளை அரவணைக்க வேண்டும்.
ஆட்டிசம் நோய் அல்ல என்பதால்
அதற்கு மருந்தும் இல்லை.பெற்றோர்களின் அதீத அன்பும் நம்பிக்கையும் தான் அச்சிக்கலிலிருந்து
அக்குழந்தைகளை மீட்டு இயல்பு வாழ்க்கை வாழ வழி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.ஆட்டிசம்
குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர்களே சிறந்த பயிற்சியாளர்களும் சிறந்த ஆசிரியர்களும்
ஆவர்.இதனை ஒவ்வொரு பெற்றோரும் உணர்ந்தால் ஆட்டிசம் அக்குழந்தைகளுக்கு அந்நியமாக்கி
இயல்பு வாழ்க்கைக்கு அக்குழந்தைகளை வித்திடும்.
மலேசியாவில் ஆட்டிசம் விழிப்புணர்வை
ஏற்படுத்துவதற்காக கடந்த 2017ஆம் ஆண்டில் தாமாஸ் அல்வா எடிசனின் வாழ்க்கையை அடிப்படையாக
கொண்டு “சிலரது வாழ்வில் ஒளியேற்றுவோம்” (light of some one’s life) என்ற தலைப்பில்
ஒரு இணையப் படம் வெளியீடு கண்டதும் ஆட்டிசம் குழந்தைகளுக்கான நிதியுதவிக்காக பாடகி
திலா லக்ஷ்மண் “ஜன்னம்” என்னும் தனிப்பாடல் ஒன்றையும் வெளியீடு செய்திருந்தார் என்பதும்
இங்கு நினைவுக்கூறத்தக்கது.
மலேசியாவில் ஏய்ட்ஸ்,புற்றுநோய்,மார்பக
புற்றுநோய் ஆகியவற்றுக்கு கொடுக்கப்பட்ட விழிப்புணர்வுகள் ஆக்கப்பூர்வமானதாக இருந்ததால்
அது குறித்த விழிப்புணர்வு தற்போது சரியான இலக்கில் பயணிக்கிறது.ஆனால்,ஆட்டிசத்திற்கு
இன்னும் அவ்வாறான ஆழமான அல்லது விரிவான விழிப்புணர்வு இல்லை.அதனை ஆக்கப்பூர்வமாக முன்னெடுக்க
அரசாங்கம் முன்வரவேண்டும்.
ஏப்ரல் 2ஆம் தேதி மட்டும் ஆட்டிசம்
நாள் என நீலசட்டையோடு கைகோர்ப்பதை மட்டும் இலக்காக கொண்டிருக்காமல் ஆட்டிசம் குறித்த
விழிப்புணர்வும் அது குறித்த நிகழ்வுகளும் எல்லாக் காலக்கட்டத்திலும் அரசாங்கம் வாயிலாகவும்
தொண்டு நிறுவனங்கள்,தன்னார்வாலர் அமைப்புகள் ஏற்படுத்தி மலேசியர்களிடையே விழிப்புணர்வை
மையம் கொள்ள வைக்க வேண்டும்.
மக்களிடையே போதிய விழிப்புணர்வு
ஏற்பாட்டால் ஆட்டிசம் பெரும் பிரச்னையே இல்லை.ஆட்டிசம் குழந்தைகளுக்காக மலேசியர்கள்
அனைவரும் வாரத்தில் ஒருநாள் நீல நிறசட்டையோடு களமிறங்கி அதனை தேசிய நிகழ்வாய் உயிர்பிக்க
செய்தால் விழிப்புணர்வு நாளைய தலைமுறைக்கும் சரியாக கொண்டு செல்லப்படும் என்பது கோரிக்கை.இதனை அரசாங்கமோ அல்லது ஆட்டிசம்
தன்னார்வ அமைப்புகளோ முன்னெடுக்க வேண்டும் என்பதை இக்கட்டுரையின் வாயிலான கேட்டுக்
கொள்கிறேன்.
No comments:
Post a Comment