Monday, 9 March 2020


உரிமையில்லா உயிர் மயிருக்கு சமம்!!
பிரதமர்கள் மாறினாலும் 
எங்கள் தலையெழுத்து
மாறாது
ஆட்சி மாறினாலும் எங்களின்
அடிமை சாசனம் மாறாது.....

எங்கள் கோவணங்கள்
கட்சிக் கொடியாய் பறந்தாலும்
எங்கள் உரிமைகள் கந்தல்துணிதான்.....

அப்துல் இரஹ்மான் தொடங்கி
நஜிப் வரை அடிமைப்பட்டுதான் கிடக்கிறோம்
மீண்டும் மகாதீர் வந்து
பிடிங்கியதை கொடுக்கவா போகிறார்
ஆட்சி மாற்றம் கோரிக்கைகூட 
உரிமையோடு இல்லாமல்
ஒப்பந்தத்தில் தொடங்குகிறது.....

நீலத்திற்கும் நாங்கள் அடிமைதான்
நாளை வரபோகும் வண்ணங்களுக்கும் நாங்கள் அடிமைதான்
வண்ணங்கள் மாறலாம்
எங்கள் வாழ்வியல் மாறாது.....

உழைப்பால் வசதியோடு வாழ்கிறோம்
உரிமைகள் கேட்டு தெருவில்
போராடுகிறோம்
நாற்காலியில் யார் அமர்ந்தாலும்
நாங்கள் பேசும் போது
செவிடர்களே....

நாங்கள் வந்தேறிகள் அல்ல
இம்மண்ணின் மைந்தர்கள்
யாருடைய உரிமையும் எங்களுக்கு வேண்டாம்
எங்களதை எங்களுக்கு கொடுங்கள் போதும்.....

அரசியல் கட்சிகள்
நாற்காலி அடிமைகள்
அரசாங்கம் இனவாத கிருமிகள்
எங்கள் உரிமைகள்
தூக்கு கயிறுகள்
நாங்கள் உழைத்து கொடுத்த
பலி ஆடுகள்.....

சட்டம் பாயும் என்பதால்
சத்தமின்றி உரிமை குரல்
எழுப்ப வேண்டியுள்ளது
உரக்க கேட்பேன் உரிமை
வேண்டுமென்று
உரிமையில்லா உயிர் மயிருக்கு சமம் என்றுசொல்லி!!!!


சிவாலெனின்

No comments:

Post a Comment

மறைந்தும் கவிதையாய் வாழும் கவிஞர் தீப்பொறி பொன்னுசாமி!!

மறைந்தும் கவிதையாய் வாழும் கவிஞர் தீப்பொறி பொன்னுசாமி!! மலேசியாவில் வாழ்ந்த வாழும் கவிஞர்களில் தங்களுக்கான நிரந்திர இடத்தை தங்களின் தனி...