அடையாளம் தொலைத்து நிற்கிறோம்!
சிவாலெனின்

உருவாக்கினோம்
கல்லும் முள்ளும் குத்தி
இரத்தம் சிந்தினோம்....
சயாம் இரயில் பாதை போட்டோம்
இரும்பி இரும்பி இரத்தம் கக்கினோம்
இம்மியும் உரிமையின்றி
செத்துப் போனோம்....
இரப்பர் மரம் சீவினோம்
சிவந்த பாலு சிந்தினோம்
செம்மண் சாலையினை
கடக்கையில்
சிவப்பு குறுதியும்
கலந்ததே....
தோட்டங்கள் சொல்லும் குறுதி சிந்திய வரலாறும்
அந்நியமாகிப் போனது
நகரில் நாடோடிகள் ஆனதால்.....
வண்ணங்களும் சதி செய்தே நாசம் செய்தது
நான்கு வண்ணம் சொல்லியே
வேதம் கூட
பிரித்து வைத்தது ....
மூவினம் நாட்டிலே
மூன்றாம் தரமாய் ஒதுக்கி வைக்கப்பட்டோம் நீலநிற ஆட்சியிலே.....
நாய்க்குகூட சொந்தம் சொல்ல
திண்ணை உண்டு
நீலம் மறுக்கப்பட்ட எங்களுக்கு
சிவப்பு இரத்தம் கூட
சொந்தமில்லை.....
வண்ணங்கள் பல கட்சி கொடியானது
எங்கள் கோமணங்களும் களவாடப்பட்டது
நாங்கள் சிந்திய வியர்வைகூட
சிவப்பானதால்...
அடையாளம் சொல்லும்
அட்டைகூட சிவப்பானதால்
அடையாளம் தொலைத்து
நிற்கிறோம் தெருவோரம்!!
No comments:
Post a Comment